Tuesday, October 18, 2022

TRANSLATION OF 'संगरोध' INTO TAMIL-Lt. Dr B. Ajantha Parthasarathi

Lt. Dr B. Ajantha Parthasarathi

 தனிமை 

குதூகல சிரிப்புடன் கூடிய மகிழ்ச்சி,

நிரம்பி வழிய 

வீட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும்

முணுமுணுப்பு 

நீ எனக்காக 

நான் உனக்காக..


உண்டியலில்

குலுக்கிவிட்ட

நாணய ஒலி போல.

தகிக்கும் மேனியை இதமூட்டும் 

மழைத் துளி போல.


ஓ பனியே!

இது யாருடைய பிரபஞ்சம்?

நுணுக்கங்களை பேணியது 

எனக்கும் 

உனக்கும்...


பழைய உறவு 

ஜன்னல்களின்

சந்துகளுடன்.

அவற்றைக் கடந்து செல்லும்

வெறும் கால்

நோய்களைத் தூண்டுகிறது.


கழுகு இடைவிடாமல் இரைகிறது

நரகத்தின் தாழ்வாரங்களிலிருந்து

புலம்பெயர்ந்தோருக்கு

விடுதலை வழங்க.


ஆத்மா உழல்கிறது 

பூமியின் இன்பங்களுக்கு.

உனது மெய்,

பல மைல்கள் தொலைவில்.

Thanimai

Kuthookala siripuddan koodiya maghizhchi,

Nirambi vazhiya

Veetin ovvoru moolailirunthum 

Munumunuppu

Ni enakaha

Nan unakaha..


Undiyalil 

Kulikivitta

Nanaya ozhi pola.

Thahikum meniyai ithamootum

Mazhai thuli pola. 


Oh paniye!

Ithu yarudaya pirapanjam?

Nunukangalai peniyathu

Enakkum

Unakkum…


Pazhaya uravu

Jannalgalin

Santhugaludan.

Avarrai kadanthu selum

Verum kal

Noigalai thoondukirathu.


Kazhuku idaividamal iraikirathu

Naragathin thazhvarangalilirunthu

Pulampeyarnthorukku

Viduthalai vazhanga.


Aathma uzhalkirathu

Poomiyin inbangaluku.

Unathu mei,

Pala milegal tholaivil.


No comments:

Post a Comment